தேர்தல் நேரத்தில் விழிப்புணர்வு உண்டாக்கவோ, சமூகத்தில் மாற்றம் உண்டாக்கி  தமிழர்களை வேறு அரசியல் தளத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாகவோ, சமூக சீர்திருத்தத்தை மனதில் கொண்டு இந்த வலைத்தளம் தொடங்கபட்டு உள்ளதாக நினைத்து ஏமாந்து போனால் சங்கம் பொறுப்பு ஏற்காது !!!

 

உள் நாட்டிலோ வெளிநாட்டிலோ தாத்தா பாட்டி வாசம் படாமல் வளரும் தமிழ் பிள்ளைகளை தூங்க வைக்க இரவு நேரங்களில் தமிழ் கதைகள் தேடி கூகுளை நாடும் தம்பதிகளுக்காக, வேலைபளு தரும் மனஅழுத்தம் தாளாமல் வலைத்தளத்தில் வடிகால் தேடும் இளைய தலைமுறையினருக்காக, சலிப்படைந்த மனங்கள் சற்றே இளைப்பாற, தமிழால் ஒத்தடமிட்டு இதமாய் வருடி விட எம்மால் இயன்ற ஒரு சிறு முயற்சி.

 

நான் வலைதளங்களில் தமிழ் சம்பந்தமாக தேடி படித்த, ரசித்த பல விஷயங்கள் மறுமுறை தேடும் போது எளிதில் கிடைப் பதில்லை. அப்படியே கிடைத்தாலும் தேவையான விசயங்கள் இணையத்தில் பலவாறாக சிதறி கிடப்பதால் மிஞ்சியது நேர விரயம் தான். இதனால் ஏற்பட்ட சோம்பேறிதனத்தின் விளைவாக எனக்கு வேண்டியவைகளை இங்கே கொட்டி இருக்கிறேன். என்னை போல் பலர் இருப்பின் அவர்களுக்காகவும் இந்த தொகுப்பு !!!

 

இதில் என் சுயநலமும் உண்டு. எனக்கு சிலமுறை தோன்றும் கேள்விகளை, அது அரசிலாக இருக்கட்டும் இல்லை உப்பு சப்பு இல்லாத வேறு எந்த விசயமாக இருந்தாலும் யார் அனுமதியும் இல்லாமல் என்னால் இங்கே பதிவிட முடியும். என் கருத்துகள் பொதுவாக பலருக்கு ஏற்புடையதாக இது வரை இருந்தது இல்லை அதனால் நிச்சயம் இந்த வலைத்தளம் எனக்கு ஒரு வடிகாலாக இருக்கும் என்று நம்புகிறேன். See Prabu’s blog

 

மூலை முடுக்கெல்லாம் பரவி கிடக்கும் உலக தமிழர் அனைவர் வாழ்விலும் வசந்தம் வீச வாழ்த்துக்கள்.

 

Please note: The site is still under construction and your suggestions are most welcome on site content, ways to improve, layout, easy access etc. Please share your opinions and feedback through my personal blog or contact

Thirukural      Learn Tamil      Tamil Rhymes    Kids Stories      Tamil Jokes      Solavadaigal     

Tamil Proverbs      Tamil Medicine      Tamil Marriage